நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினாலும், அது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கின்றார். இது குறித்து லாவண்யா கூறியதாவது, “நான் மாடலிங் செய்த காலத்திலேயே நேரடியாகவே அது பற்றி கேட்பார்கள். ஒருமுறை பெண் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகேவா என கேட்டார்.
வெளிப்படையாகவே கேளுங்கள் என சொன்னதற்கு, Physical adjustment என அவர் கூறினார். அதன் பின் ஒருமுறை ஒரு casting director ஆறு மாதம் மட்டும் என்னுடன் இரு. எங்கயோ போய்டுவ என ஓப்பனாகவே லிவின் பற்றி கேட்டார். சில நடிகைகள் பெயரை கூறி அவர்கள் தற்போது கார், வீடு என பெரிய அளவில் இருப்பது பற்றி கூறினார். நான் இந்த துறைக்கு புதிது என்பதால் அது பற்றி எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.