Categories
மாநில செய்திகள்

பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில்…. இன்று முன்பதிவு…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போதும் சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் தற்போது தாம்பரம் மற்றும் திருநெல்வேலி இடையே பண்டிகை கால சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது.

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 20ஆம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மேலும் இந்த ரயில் செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை,விருதுநகர் மற்றும் கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனவும் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |