கொள்ளிடம் 35 மதகுங்களும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறுவதால் ஆறு கடல் போல காட்சி அளிக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் கல்லணையில் இருக்கும் 35 மதகுகளும் திறக்கப்பட்டு 57 ஆயிரத்து 675 கன அடி நீர் வெளியேறுகிறது. இதனால் கல்லணை கொள்ளிடம் பாலத்தின் அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் பாதி அளவு மூழ்கி நிலையில் இருக்கின்றது. கொள்ளிடம் புதிய பாலத்தில் இருந்து பார்க்கும்போது கொள்ளிடம் ஆறு கடல் போல காட்சி அளிக்கின்றது.
நேற்று மாலை நிலவரப்படி கல்லணை பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேலே தண்ணீர் சென்றது இதனால் திருச்சி, தஞ்சை மாவட்ட எல்லையாக கொண்டிருக்கும் கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் வேகமாக செல்கின்றது. இதனால் 20க்கும் மேற்பட்ட மாடுகள் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. நீந்தி கரையேற முடியாமல் அத்தனை மாடுகளும் கல்லணை கொள்ளிடம் ஆற்றின் மணல் போக்கி மதகுகளின் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள்.