சீரியல் நடிகை ரச்சிதாவுக்கும், தினேஷ்க்கும் சட்டப்படி விவாகரத்து செய்யப்போவது உறுதி.
சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் தமிழ் சினிமா மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி நடிகை ரச்சிதா. முதல் பாகம் முடிவடைய இரண்டாவது பாகத்தில் யார் மீனாட்சியாக நடிப்பார் என அப்போது அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படி ஒரு வேடத்தில் நடிக்க தொடங்கி இப்போது தொடர்ந்து நிறைய சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது விஜய் டிவியின் “பிக் பாஸ் 6” ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் கணவர் தினேஷிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் அது பற்றி அவர் ஷோவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் “பிக் பாஸ் 6” ஓப்பனிங் விழாவில் தன் அப்பா, அம்மா குடும்பம் பற்றி மட்டுமே பேசியுள்ளார். கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அதனால் அவர் சட்டப்படி விவாகரத்து பெறுவது உறுதி என தெரிந்தது. தற்போது பிக் பாஸில் சில போட்டியாளர்களிடம் ரச்சிதா கூறியதாவது, “தான் கணவருடன் சந்தித்த பிரச்சனை பற்றி பேசி இருக்கின்றார்.
நான் சம்பாதிக்கும் பணத்தை எனது அப்பா அம்மாவுக்கு கொடுக்க கூடாது என்று தினேஷ் பிரச்சனை செய்தது பற்றி அவர் கூறியுள்ளார். அந்த பிரச்சனையையே நான் அதிகம் பார்த்துவிட்டேன். அதனால் அவர்களுக்கு என்று ஒரு பணம் இருக்க வேண்டும் என சொல்விட்டேன். நான் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அதை எனக்கு கொடுக்காதீர்கள் என அப்பா, அம்மாவிடம் சொல்லிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.