உத்திரபிரதேச மாநில ஹமீர்பூர் என்ற மாவட்டத்தில் முதியவர் ஒருவர் கென் ஆற்றங்கரையில் குடிப்பதற்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சதுப்பு நில சகதியில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து கிராமவாசிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர் சகதியில் மாட்டிக் கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாக வருகிறது.
அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் சதுப்பு நில சகதியில் இடுப்பளவு சகதியில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்க ஒருவர் கம்பை முதியவரிடம் கொடுத்து அவரை மீட்க முயல்கிறார். முதியவரின் பக்கத்தில் அவர் தண்ணீர் பிடிக்க எடுத்து வந்த குடம் கிடக்கிறது. காவலர் ஒருவர் சிரித்து கொண்டே வீடியோ எடுக்கிறார். இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது
महज पीने के पानी के लिए इतनी मशक्कत…
उत्तर प्रदेश वाले हमीरपुर के गऊघाट गांव का पानी खारा है. अन्य कोई स्त्रोत नहीं है, इसलिए वर्षों से गांव वाले पास से गुजरने वाली केन नदी से पीने का पानी लाने के लिए मजबूर हैं. #UttarPradesh #WaterCrisis pic.twitter.com/FjCbmNTEqa
— Nitesh Ojha (@niteshojha786) October 8, 2022