Categories
சினிமா தமிழ் சினிமா

அந்த 3 பெண்கள் செய்த செயல்…. கண்கலங்கிய அசீம்…. பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன….???

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பாக வைல் கார்டு எண்டிரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார். இதனை அடுத்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தலைவர் போட்டி ஜிபி முத்து வீட்டின் தலைவரானார். பிக் பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தார்கள். மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து தான் கிளம்புவதாக கூறிவரும் ஜி பி முத்து எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கப் போகிறார் என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று வெளியான ப்ரோமோ காட்சியில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. கதை சொல்லும் நேரம் என்ற பெயரில் ஆரம்பமான டாஸ்க்கில் அசீம் தன்னுடைய கதையை கூறினார். ஆனால் குறித்த நேரத்தில் கதையை முடிக்கும் நபர்கள் அடுத்த வார நாமினேஷன் இருந்து விடுபடுவார்கள் என்று கூறியுள்ளனர். இதில் அசிம் தன்னுடைய கதையை கூறிக் கொண்டிருந்த போது ரட்சிதா, சாந்தி, மகேஷ்வரி பசரை அழுத்தி அசிமை கதை முடிக்கி விடாமல் செய்துள்ளனர். இதனால் வெளியே வந்த அசிம் கண்கலங்கி அழுதுள்ளார்.

Categories

Tech |