தனுசு ராசி அன்பர்களே..! இன்று தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள், வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள் தான் இன்றைய நாள் இருக்கும். இன்று மனக்கவலை விலகிச்செல்லும்.
மற்றவர்களிடம் பகை ஏற்படாமல் பழகுவது மட்டும் நல்லது. காரியங்களில் மெத்தன போக்கே கொஞ்சம் காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சக மாணவர்களிடம் நிதானமாக பழகுவது ரொம்ப நல்லது. இன்று பொறுமையை கடைபிடியுங்கள், முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். மனம் மிகவும் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகும் காணப்படும். எந்தவித தடையும் இல்லாமல் முன்னேற்றமான சூழல் இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், காரியங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை