Categories
உலக செய்திகள்

“அடுத்த வருடம் தனது பேரக் குழந்தைகளை சந்திக்கும் மூன்றாம் சார்லஸ்”…? வெளியான தகவல்… நிபுணர் கருத்து..!!!!!

அடுத்த வருடம் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக இளவரசர் ஹரி மற்றும் மேகன் மார்க்கலுடன் அவர்களது குழந்தைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட் பிரித்தானியாவிற்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்போது மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பேரக்குழந்தைகள் லிலிபெட் மற்றும் ஆர்ச்சியுடன் மீண்டும் சேர்வார் என கூறப்படுகிறது இந்த நிலையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி மன்னரின் முடி சூட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக அரசர், நிபுணர் மற்றும் எழுத்தாளரான Russell myers நம்புகின்றார். ஏனென்றால் அவர்களின் எதிர்காலம் அதில் அடங்கியிருப்பதாக அவர் கூறுகிறார். இது பற்றி அவர் பேசிய போது அவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் ஹரியும் மேகனும் அங்கு இருக்க மாட்டார்கள் என்று என் வாழ்நாள் முழுவதும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை ஆனால் அவர்கள் கண்டிப்பாக வருவார்கள் அதில் சந்தேகம் இல்லை.

மேலும் ஆர்ச்சியின் பிறந்த நாளில் அவர்கள் குழந்தைகளை அங்கே விட்டு விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதனால் அவர்கள் ஒரு வாரத்திற்கு வந்து முடி சூட்டு விழாவில் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்கள் அரசு குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவார்கள் அவர்களின் உறவுகள் அப்போது எப்படி இருக்கும் என்பது யாருக்கு தெரியும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் ஹரியும் மேகனும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். ஆர்ச்சியும், லிலிபெட்டும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் தங்கள் பெற்றோர்களை பிரிந்து அமெரிக்காவிலேயே இருந்துள்ளனர்.

Categories

Tech |