கன்னி ராசி அன்பர்களே..! இன்று கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் அனைத்துமே சரியாகும். விருந்தினரின் வருகை உங்களுக்கு இருக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். மனம் புத்துணர்ச்சி ஆகவே இன்று காணப்படும். இன்று அனைத்து விஷயங்களிலும் திறம்பட செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தைரியம் கூடும், தன்னம்பிக்கை கூடும், காரியத்தில் அனுகூலமும் ஏற்படும்.
எதிர்பார்த்த பணமும் வந்து சேரும், மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவார்கள். விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுக்கல், வாங்கலிலும் ரொம்ப சிறப்பாகவே இருக்கும். மற்றவர்களிடம் மட்டும் கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். இதை மட்டும் நீங்கள் இன்று கவனத்தில் கொள்ளுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்