மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்கு மூலத்தில் இருப்பதாவது,
15/01/2018 மற்றும் 12/01/2018 தேதிகளில் என் சார்பாக ஆணையத்தில் தன் வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி மனு மற்றும் மெமோவில், இந்த ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் வாயிலாக தாக்கல், குறியீடு செய்யப்பட்ட ஆவணங்கள், புகார்கள், மனுக்கள் அனைத்தையும் தர கோரி இருந்தேன். எனினும் 30/01/2018 தேதியிட்ட உத்தரவோடு மேற்படி ஆவணங்கள், புகார்கள், மனுக்கள் எதையும் என் வழக்கறிஞருக்கோ, எனக்கோ இந்த ஆணையம் வழங்கவில்லை. அத்துடன் அதற்கான காரணத்தையும் அந்த உத்தரவில் இந்த ஆணையம் குறிப்பிடவில்லை.