Categories
தேசிய செய்திகள்

“புதருக்குள் கிடந்த சூட்கேஸ்” நிர்வாணமாக இருந்த பெண்ணின் சடலம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் குரு கிராம் அருகே IFFCO சவுக் அருகே ஒரு மர்மமான சூட்கேஸ் கிடந்துள்ளது. இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் டெல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சூட்கேசை திறந்து பார்த்தபோது நிர்வாணமான நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சூட்கேஸில் நிர்வாணமாக கிடந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அதோடு அந்தப் பெண்ணின் இடுப்பில் சில தீக்காயங்கள் இருப்பதாகவும், அந்தரங்க உறுப்பு சிதைந்து இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்‌. மேலும் பட்டப்பகலில் சாலை ஓரமாக சூட்கேஸில் நிர்வாணமாக ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |