கடகம் ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போன்று பார்க்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடந்து கொள்வது நல்லது. எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. இன்று தொழில் வியாபாரம் போதுமானதாக எதிர்பார்த்தபடி நல்லபடியாகவே நடக்கும்.
பணம் தட்டுப்பாடு ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சங்கடங்களும் சரியாகும், புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும். இன்று வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகத்தான் செல்லவேண்டும், பார்த்துக்கொள்ளுங்கள். உடல்நிலையிலும் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு எந்தவித தடையுமில்லாமல் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்,
முக்கியமான பாடங்களை படிக்கும் பொழுது, படித்த பின்பு எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்