மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கையை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
கடந்த 21/09/2016 அன்று காலையில் இருந்து அக்கா ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் அதிகரித்தது. இதனால் நான் அக்காவிடம் இன்றைய அலுவல் பணிகளை ரத்து செய்து விடுங்கள் என்று சொன்னேன். ஆனால் மத்திய அமைச்சர் விழாவிற்கு வருகிறார். இதனால் நான் கட்டாயம் போக வேண்டும் என்று ஜெயலலிதா கூறிவிட்டார். உடல்நலக் குறைவு ஏற்பட்டபோதிலும் தன் கடமையிலிருந்து அவர் பின் வாங்காமல் பணியினை முடிப்பதில் பிடிவாதம் காட்டினார் என்பது இந்த அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.