தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தனதுகென்று ஓர் ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது சமூக வலைதளத்தில் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது. அதாவது இப்படத்தில் இடம்பெறும் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ என்ற பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். இந்த பாடலை தான் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும், இந்த பாடல் மற்றும் இதன் காட்சிகள் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு வாரிசு பட காட்சிகள் இணையத்தில் கசிந்தது குறிப்பிடத்தக்கது.