ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பாக அரவணைத்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப சிறப்பு. போராடி வெல்லும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். குடும்ப கஷ்டம், கடன் தொல்லை ஓரளவு கட்டுக்குள் இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதையை நோக்கி இன்று நீங்கள் அடியெடுத்து செல்வீர்கள்.
பயத்தை வெளிக்காட்டாமல் தைரியமாக இருப்பது ரொம்ப நல்லது, மற்றவர்களுக்காக செயல்படுவீர்கள். இன்று பணவரவு காரியத்தடை ஓரளவு நீங்கும். இன்று எடுக்கும் முயற்சிகள் ஓரளவு பலனையே கொடுக்கும். திருமண முயற்சிகள் சிறப்பை கொடுப்பதாகவே இருக்கும். இன்று கொஞ்சம் பேசு பொழுது நிதானத்தை மட்டும் கடைபிடிப்பது ரொம்ப நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்