Categories
பல்சுவை

மக்களே!…. கிரெடிட் கார்டு பேமென்ட் கட்ட தவறினால் என்ன நடக்கும் தெரியுமா?…. படிச்சி தெரிஞ்சுக்கோங்க….!!!

மற்ற கட்டணங்களை எல்லாமும் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருள்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவை தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக வட்டி அல்லது கிரெடிட் ஸ்கோர் குறைவது போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலருக்கும் இதெல்லாம் தெரிந்திருக்கும். இருப்பினும் பலரும் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை உரிய தேதிக்குள் செலுத்தாமல் விடுவதற்கு கையில் பணமில்லாதது, மாத கடைசி என பல காரணங்கள் புயல் சின்னங்களை போல தாமதமாகவே உருவாக தான் செய்கிறது. கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டுகள் மீது புதிய விதிமுறைகள் இந்த ரிசர்வ் வங்கி கடந்த ஜூலை மாதத்தில் தான் கொண்டு வந்தது. ஒரு வேளை ஒருவர் கிரெடிட் கார்டு தவணையை உரியநேரம் கட்ட தவறினால், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கிரெடிட் கார்டு வழங்கும் அமைப்பு அல்லது வங்கி உங்கள் கணக்கை கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு கடன் பாக்கி அட்டையாக அறிவித்து விடும்.

அதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு அறிக்கையின் குறிப்பிட்டுள்ளபடி அட்டையை வழங்குபவர் எத்தனை நாட்கள் தாமதமானது, அந்த நாள்களை கணக்கிட்டு செலுத்த வேண்டிய தேதியிலிருந்து அபராத கணக்கு கட்டங்களையும் கணக்கிட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறையில் உள்ளது. அதே நேரத்தில் செலுத்த தவறிய தொகைக்கு தாமதமாக செலுத்தியதற்காக அபராதம் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் இந்த அபதாரமானது செலுத்த தவிர தொகைக்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமே, தவிர கட்டவேண்டிய மொத்த தொகைக்கும் வசூலிக்கப்படாது. அதாவது, கிரெடிட் கார்டு வழங்குபவர் குறைந்தபட்ச ஒரு மாத காலத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பிதான் இந்த கட்டணங்களில் மாற்றம் செய்ய முடியும். ஒரு வேளை உங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குபவர் வசூலித்த அபராத தொகை, வட்டி விகிதம் போன்றவை உங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்த வேண்டிய முழு தொகையையும் முழுமையாக செலுத்திய பிறகு கிரெடிட் கார்டு வேண்டாம் என்று ஒப்படைக்க வேண்டும்.

இதுபோன்ற நேரங்களில் கிரெடிட் கார்டு வழங்குபவர் உங்களிடம் இருந்து கூடுதலாக கட்டணத்தை வசூலிக்க முடியாது. ஒருவர் கிரெடிட் கார்டு கணக்கை முடிக்க விருப்பம் தெரிவித்தால், ஆர்பிஐ வழிகாட்டுதலின்படி அதனை 7 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்பது நடைமுறை. வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் கடன் அட்டை வரம்பை உயர்த்துவது, புதிய கடன் அட்டை அளிப்பது போன்றவற்றில் வங்கி ஈடுபடக்கூடாது. அதனைபோல இலவச கடன் அட்டை மீது மறைமுக கட்டணங்கள் எதையும் விதிக்க கூடாது. இதனையடுத்து கடன் அட்டை குறித்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் ஸ்டேட்மெண்டில் பணம் செலுத்த குறைந்தபட்சம் 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் கிரெடிட் கார்டு கணக்கு முடிக்க வலியுறுத்தியும் அவர் அதனை செயல்படுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு ஒவ்வொரு நாளுக்கும் 500 அவதாரம் கணக்கு வைத்திருப்பதற்கு வழங்குபவர் கொடுக்க வேண்டும்.

Categories

Tech |