ஜெயலலிதா வெளிநாடு சென்று சிகிச்சை அளிக்க சம்மதிக்கவில்லையா ? என்ற புதிய வீடியோவானது வெளியிடப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கையில் நேற்று தமிழக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது. அதிலுள்ள விவரங்கள் எல்லாம் செய்தியாக வெளிவந்தது. இந்நிலையில் டாக்டர் ரிச்சர்ட் பீலே. லண்டனை சேர்ந்த மருத்துவர். அவர் தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ அது. ஆறுமுகசாமி ஆணையத்தின் உறுப்பினர் முன்பாக அவர் பேசிய அந்த உரையாடல் தொடர்பான வீடியோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
அந்த வீடியோவில் ஜெயலலிதாவை வெளிநாட்டில் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது தொடர்பான கேள்வியும், பதிலும் இடம் பெற்றிருக்கின்றன என்பதை பார்க்க முடிகின்றது. கேள்வி கேட்பவர் அவரிடம் கேட்கிறார்… நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறீங்க ? இந்த மாதிரி முதலமைச்சர் ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதற்கு வரவில்லை என்று நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களே என்று கேட்கிறார்.
அதற்கு டாக்டர் ரிச்சர்ட் பீலே ஆம் என்று பதிலளிக்கிறார். அப்பொழுது மீண்டும் அந்த ஆணையத்தின் உடைய சார்பாக கேள்வி முன் வைக்கும் போது, இதுபோல ஒரு முறை முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு அறுவை சிகிச்சை முடிவெடுக்கபட்டபோது அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவரை ஆபரேஷனுக்கு ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அதுபோல லண்டனுக்கு சிகிச்சை பற்றி சசிகலா என்ன சொன்னார் என்று அந்த கேள்வியை கேட்கப்படுகிறது ?
அதற்கு பதிலளித்த டாக்டர் ரிச்சர்ட் பீலே என்ன பதில் சொல்கிறார் என்றால் ? சசிகலா என்னிடம் நேர்மையான முறையில் கேட்டார். நான் என்ன சொன்னேன் என்றால், கட்டாயம் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் என்று தான் நான் சொல்லி இருந்தேன் என்று பதில் அளிக்கிறார்.ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தான் கூறினேன். ஆனால் அதன் பின்னர் சிகிச்சை ”மேடமே’ விரும்பவில்லை என தெரிவித்தார். அவர் மேடம் என்று குறிப்பிடுவது ஜெயலலிதாவை. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்வதை விரும்பவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.