தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டியின் விளைவாக இறப்பு, காயங்கள் ஏற்பட்டதற்கான காரணங்கள் சூழ்நிலைகள் குறித்தும் சட்ட ஒழுங்கு சீர்குலைவுகள் காரணமாக பொது சொத்துக்கள், தனியார் சொத்துக்கள் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் உள்ளிட்ட பிந்தைய நிகழ்வுகள் பற்றி விசாரிக்க நீதிபதி அருணாசல ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையும் இறுதி அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் ஏற்று தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் காவல்துறை தனது உரிய அதிகாரத்தை பயன்படுத்தி நடந்த நிகழ்வு அல்ல. நிச்சயமாக வரம்பு மீறி உள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது. காவல்துறை தரப்பில் நிச்சயமாக மீகை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
எனவே இந்த விஷயத்தில் ஈடுபட்ட 17 காவல்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டபூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை அளிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலுவலர்களுக்கு எதிராக துறை சார்ந்த நடவடிக்கை தொடங்கப்பட வேண்டும். விசாரணை ஆணையத்தின் பரிந்துரை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது என்று தனது உத்தரவில் தலைமைச் செயலர் என்று தெரிவித்துள்ளார். விசாரணை ஆணைய அறிக்கையில் ஆட்சியர் வெங்கடேசன் மற்றும் துப்பாக்கி சுட்டியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்ற சாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவ நடந்த நேரத்தில் ஆட்சியாக இருந்த வெங்கடேசன் நடவடிக்கை மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது கிளர்ச்சியும் குழப்பமும் இருந்த நேரத்தில் ஒரு மாவட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக முகாம் அலுவலகத்தில் அவர் இருந்த போதும் அமைதி பேச்சுவார்த்தை நடத்த முன் வரவில்லை. அவர் தனது பொறுப்பை தட்டிக் கழித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றனர்.
ஆனால் இந்த விவகாரமே தனக்கு தெரியாது என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். ஆட்சியர் வெங்கடேசன் செயலின்மை, அக்கறையின்மை மற்ற அதிகாரிகளின் இணக்கமின்மை ஆகியவற்றையை அது காட்டுகிறது. அவர் தனது கடமைகளில் இருந்து தவறி விட்டார். அதனைப் போல இந்த சம்பவத்தின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் காவல்துறை தலைவரிடம் எந்த விதமான அறிவுரையும் பெறவில்லை. துப்பாக்கி சூடு சிறந்தவரான காவலர் சுடலைக் கண்ணுவை காவல் கண்காணிப்பில் மகேந்திரன் அழைத்துச் சென்றார். இருவரும் சேர்ந்து நடத்தி துப்பாக்கி சுட்டில் இரண்டு பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொறுத்தவரையில் காவல்துறையினர் வரம்பு மீறி செயல்பட்டிருக்கின்றன என்பது ஆணையத்தின் தீர்க்கமான முடிவாகும். தற்காப்புக்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக காவல்துறையினர் எந்த வாதமும் வைக்கவில்லை. எனவே துப்பாக்கி சூட்டுக்கு காவல்துறையின் உயர் அதிகாரி முதல் காவலர்கள் வரை தனித்தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பாகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் சூழ்நிலைகளால் உணர்ச்சிவையப்பட்டு செயல்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு விஷயத்தை சொல்லும்போது பொதுமக்கள் அதை கூர்ந்து கவனிப்பார்கள். எனவே அவர்தான் கூறும் தகவலை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் கருத்து ஒன்றை அவர் கூறியுள்ளார். அவரின் தகவல்களை கூறுவதற்கு முன்பாகவே அவற்றை சரி பார்ப்பது நல்லது. பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் பொதுமக்களை தவறாக வழிநடத்து வாய்ப்பு உள்ளது. அவை இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க உதவாது. அதற்கு மாறாக அதிகமான பிரச்சனைகளை உருவாக்கும். மேலும் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பொறுப்பான 17 காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களை நீதிபதி அருணா ஜெகதீசன் வெளியிட்டுள்ளார். இவைகள் அனைத்தும் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அவரது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.