Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு: அப்பல்லோ மருத்துவமனை ட்ரீட்மெண்ட் பற்றி…. சசிகலா சொல்வது என்ன?….!!!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,

அக்கா ஜெயலலிதாவின் இறப்பை என்னால் இன்றளவும் ஜீரணிக்க முடியவில்லை. அக்கா உயிரோடு இருந்தவரை அவரை ஒரு குழந்தை போன்று, ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து தான் பார்த்து வந்தேன். அக்காவின் தேவைகள் தெரிந்து அவர் மன விருப்பப்படி நான் செயல்பட்டு வந்தேன். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த பிறகு குணமடைந்து, பின் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நாளடைவில் பூரண குணமடைந்து விட்ட நிலையில், அதிர்ச்சியளிக்கும் அடிப்படையில் அக்கா ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையில் அப்பல்லோவில் அக்காவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அத்துடன் அக்கா ஜெயலலிதாவை 2 முறை அப்பல்லோ மருத்துவமனையில் பார்த்த திரு.வெங்கையா நாயுடு அவர்களும் அக்கா இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என பேட்டியில் கூறினார் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |