ஜர்னலிசம் படிப்பை முடித்துவிட்டு செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்தவர்தான் பிரியா பிரின்ஸ். இதையடுத்து விஜய்யில் ஒளிபரப்பாகிய இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை எனும் சீரியல் வாயிலாக நடிக்க தொடங்கிய இவர் தொடர்ந்து பல்வேறு சேனல்களில் தொடர்கள் நடித்து வந்தார். ரஜினியின் 2.0, சூர்யாவின் பசங்க-2, வானவராயன் வல்லவராயன் ஆகிய படங்களிலும் அவர் நடித்து இருக்கிறார்.
கடைசி ஆக மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் நிகழ்ச்சியில் தன் கணவருடன் இணைந்து போட்டியிட்டார். அனைத்து பிரபலங்களை போன்று இவரும் யூடியூப் பக்கம் வைத்துள்ளார். அவற்றில் தற்போது தன் புது வீட்டை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அவரது வீட்டில் பார்செட்டப் அனைத்தும் வைத்துள்ளாராம்.