வரும் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு வேட்டி, சேலை, இனிப்புகள் அடங்கிய தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே விருமன் பட வெற்றியை அடுத்து நடிகர் சங்கத்துக்கு சூர்யா ரூபாய்.10 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார். இந்த நிலையில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் ரூ.2 லட்சத்து 50ஆயிரம் வழங்கினார்கள்.
இதையடுத்து இவற்றிலிருந்து தீபாவளிக்கான பரிசுப் பொருட்கள் வாங்கப்பட்டு சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலுள்ள நடிகர் சங்க உறுப்பினர்கள் 1002 நபர்களுக்கு அந்தந்த மாவட்டங்களுக்கு தீபாவளி பரிசு பொருட்களை அனுப்பி வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
சென்னையிலுள்ள 1206 உறுப்பினர்களுக்கு நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சிமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா, தளபதி தினேஷ், எம்.ஏ.பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினர்.