Categories
தேசிய செய்திகள்

“அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து” டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!!!!

புதுடெல்லியில் 38 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணை கை, கால்களை கட்டி கோணிப்பையில் வைத்து அடைத்து சாலையோரமாக வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தற்போது காவல்துறையினருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண்மணி தன்னுடைய சகோதரனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்காக ஆட்டோ ரிக்ஷ்சாவுக்காக காத்திருந்தார். அப்போது வழியாக வந்த நான்கு பேர் காரியில் அந்த பெண்ணை கடத்திச் சென்று 2 நாட்கள் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் 5 பேர் குற்றவாளிகள். இந்நிலையில் 5 பேரும் அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்துள்ளனர். இதனால் அந்த பெண் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த வழக்கில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதா என்பது குறித்து காவல்துறையினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

அந்தப் பெண்மணிக்கு நடந்த சம்பவம் நிர்பயா சம்பவத்தையே மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. மேலும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 5 குற்றவாளிகளும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் எனவும், இன்னும் எத்தனை நாளைக்கு தான் குழந்தைகளும், பெண்களும் இது போன்ற கொடூரமான துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |