Categories
உலக செய்திகள்

இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தாக்குதல்… 20 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய கோர தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்  இட்லிப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரிட்டனை  மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Image result for More than 20 civilians were killed in Syrian government attacks on ... aerial bombing killed at least nine children and three teachers in Idlib city

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தொடர் தாக்குதலில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்திருக்கிறது. கடந்த 2019 டிசம்பர் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருவதன் காரணமாக சுமார் 90,000 பேர் சிரியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று ஐநா சபை தெரிவித்துள்ளது.

Image result for More than 20 civilians were killed in Syrian government attacks on ... aerial bombing killed at least nine children and three teachers in Idlib city

முன்னதாக, கடந்த 6 வருடங்களாக சிரிய நாட்டில் அதிபர் ஆசாத்துக்கும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையே  உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிரியாவின் பல பகுதிகளை அரசு கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி மீட்டது. மீட்கப்பட்டு விட்டாலும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |