தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை அமைக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வரை அவசியம் என அவர் தெரிவித்த நிலையில் தூய்மை பணியாளர்கள் அமர்ந்து இளைப்பாற, உணவருந்த போதிய வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு உத்தரவிட்டார்.
மேலும் அரசு அலுவலக தலைமை அலுவலர்கள் மூலமாக வசதிகளை செய்து தந்து புகைப்படங்களுடன் அறிக்கை அனுப்ப அனைத்து ஆட்சியர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதேசமயம் அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்காக கழிவறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.