Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏல சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வாலிபர்…. விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி பின்னணி….!!!!

சென்னை மாவட்டத்தில் மவுலிவாக்கம் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அலமேலு என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரிடம் ஏல சீட்டு கட்டி வந்துள்ளார். மேலும் அலமேலு தனது உறவினர்களையும் ஏலச்சீட்டுக்கு சேர்த்து விட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏல சீட்டு முடிந்த பிறகு சீட்டு கட்டியவர்களிடம் பணத்தை கொடுக்காமல் கார்த்திகேயன் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அலமேலு பல முறை கார்த்திகேயனிடம் பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் கார்த்திகேயன் பணத்தை தர மறுத்துள்ளார். இதனால் ஆவடியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அலமேலு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலன் வழக்கு பதிந்து விசாரணை நடத்த தொடங்கியுள்ளார். இந்த விசாரணையில் கார்த்திகேயன் ஏலச்சீட்டு நடத்தி 30 பேருக்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் 61 லட்சத்து 19 ஆயிரத்து மோசடி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் கார்த்திகேயனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |