தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபரான ஸ்ரீதர் வேம்பு சோஹோ நிறுவனம் வாயிலாக தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்து வருகிறார். மேலும் தன் நிறுவனத்தில் பலதரப்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வழங்கி வருகிறார். கல்வி அடிப்படையில் மட்டுமின்றி திறமை மற்றும் முழுஈடுபாட்டின் அடிப்படையிலும் அவரது நிறுவனத்தில் பணிவாய்ப்பு பெற்றவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தன் கல்வித்தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை தான் சேர்ப்பதில்லை என ஸ்ரீதர் வேம்பு தெரிவித்து இருக்கிறார்.
5/ My own personal liberation came when I decided to leave that academic prestige path and go build real engineering systems for a living.
I have long refused to list my PhD among my qualifications because I don't value that work and consider it all but useless.
— Sridhar Vembu (@svembu) October 19, 2022
இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பிஎச்டி பட்டம் பெற 4 வருடங்கள் செலவிட்டேன். எனினும் அவற்றை பயனற்றது என கடந்து விட முடியாது. அந்த காலகட்டத்தில் தான் கல்வியை நிஜ வாழ்க்கையோடு தொடர்புப்படுத்திப் பார்ப்பதன் அவசியத்தைப் புரிந்துகொண்டேன். இதற்கிடையில் பொம்மை மாடல் கல்வியில் நாட்டமில்லை. எனது தனிப்பட்ட சுதந்திரத்தை நான் அடைந்ததும் கல்வியால் கிடைக்கும் கெளரவத்தைவிட்டு நிஜவாழ்க்கைக்குத் தேவையான பொறியியலை கட்டமைக்க ஆரமித்தேன். நீண்ட நாட்களாகவே என் கல்வித்தகுதிகளில் பிஎச்டி பட்டத்தை நான் சேர்ப்பதில்லை. அத்துடன் அதை நான் மதிக்கவில்லை. அதனைப் பயனற்றதாகவே கருதுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.