Categories
தேசிய செய்திகள்

தீபாவளி ஆஃபர்: கம்மியான விலையில் விமான டிக்கெட்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்த பண்டிகைக்காலத்தில் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் திட்டம் உங்களுக்கு இருந்தால், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. தற்போது மலிவாக டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். அதாவது, விஸ்தாரா ஏர்லைன்ஸானது தன் பயனாளர்களுக்கு ஒரு அதிரடியான சலுகையினை கொண்டுவந்துள்ளது. இதன் வாயிலாக பயனாளர்கள் மலிவான விமானம் டிக்கெட்டுகளை பெறமுடியும். பண்டிகைக் காலத்தை கருதி இவ்வசதியை அந்நிறுவனமானது துவங்கியுள்ளது. அந்நிறுவனம் உள் நாட்டு மற்றும் சர்வதேச டிக்கெட்டுகளில் பம்பர் தள்ளுபடியை வழங்குகிறது.

இந்த விற்பனை எகானமி, பிரீமியம் எகானமி மற்றும் பிசினஸ் போன்ற 3 பயண வகுப்புகளுக்கும் ஆகும். எனவே வாடிக்கையாளர்கள் தங்களது வசதிக்கேற்ப டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம். நிறுவனம் அனைத்து உள் நாட்டுத் தளங்களுக்கும் (டொமஸ்டிக் செக்டர்) இந்த விற்பனையைத் துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் இந்த விற்பனையானது அக்டோபர் 17 முதல் துவங்கி இன்று வரை நடைபெற்றுள்ளது. அதன்படி, உள்நாட்டு டிக்கெட்டுகளை வாங்க விரும்புவோர்களுக்கு இன்றே கடைசி நாள் ஆகும். அதே சமயத்தில் நீங்கள் அக்டோபர் 20 வரை சர்வதேச டிக்கெட்டுகளை புக்செய்யலாம். இவ்விற்பனையில் வாடிக்கையாளர்கள் 23 அக்டோபர் 2022 முதல் 31 மார்ச் 2023 வரையிலான காலஅளவில் பயணம் செய்ய டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விற்பனையில் கிடைக்கும் டிக்கெட் கட்டணங்களின் விபரம் பின்வருமாறு

# எகானமி வகுப்பினில் ஒருவழி உள்நாட்டு விமானம் பயண டிக்கெட்டை ரூபாய்.1499க்கு புக்செய்து கொள்ளலாம்.

# பிரீமியம் எகானமி வகுப்பில் ரூபாய்.2999-க்கும், பிசினஸ் வகுப்பில் ரூ.8999-க்கும் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.

இது தவிர்த்து டெல்லியிலிருந்து காத்மாண்டு போகும் வாடிக்கையாளர்கள் எகானமி வகுப்புக்கு ரூபாய்.14,149-லும், பிரீமியம் வகுப்பிற்கு ரூ.18,499லும், வணிக வகுப்புக்கு ரூ.42,499லும் டிக்கெட் முன் பதிவு செய்யலாம்.

Categories

Tech |