Categories
அரசியல்

“தீபாவளி பண்டிகை” நல்லெண்ணெய் குளியல் மற்றும் செய்ய வேண்டிய பூஜைகள்…. இதோ சில தகவல்கள்….!!!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவர். வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது 5 நாள் திருவிழாவாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை தீப ஒளி  திருநாள் என்றும் அழைக்கப்படுவதால் தீபாவளி பண்டிகையன்று நாம் வீட்டில் அகல் விளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையின் போது செய்ய வேண்டிய பூஜைகள் குறித்து பார்க்கலாம். அதன்படி அக்டோபர் 23-ஆம் தேதி மாலை நேரத்தில் வீட்டில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை வீட்டில் விளக்கு ஏற்றி அதற்கு முன்பாக வைத்து தன திரியோதசி பூஜை செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

அதன்பிறகு தீபாவளி பண்டிகையின் போது அக்டோபர் 24-ஆம் தேதி அதிகாலை எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, சீயக்காய் பூசி சுடுதண்ணீரில் குளித்தால் கங்கா நீரில் நீராடியதற்கான புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதனால் உடலில் உள்ள சூடு குறைந்து ஆரோக்கியமும் மேம்படும்.

இதனையடுத்து நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்ததை கொண்டாடும் விதமாகத்தான் பட்டாசுகள் வெடிக்கப்படுகிறது. இந்த நாளில் மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை மகிழ்ச்சியோடு கொளுத்த வேண்டும். ‌ இதைத்தொடர்ந்து அக்டோபர் 25-ஆம் தேதி அமாவாசை அன்று லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும்.

இந்த பூஜை செய்வதினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தீபாவளி பண்டிகை முடிவடைந்த மறுநாள் சிவபெருமானுக்கு உகந்த கோதா கௌரி நோன்பு விரதத்தை கடைபிடிப்பார்கள். இந்த விரத தினத்தில் காலையில் இருந்து மாலை வரை எந்த ஒரு உணவும் சாப்பிடாமல் மாலை நேரத்தில் சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலை மற்றும் ஆல இலைகளை சிவபெருமானுக்கு படைத்து பூஜைகள் செய்வார்கள்.

இதனையடுத்து பால் மற்றும் பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள். இந்த விரதத்தினால் கணவன்-மனைவிக்கு இடையே ஒற்றுமை மேம்படும் என்பது ஐதீகம். மேலும் அக்டோபர் 26-ம் தேதி சகோதர சகோதரிகள் தினமாக கருதப்படும் யம துவிதிதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்களை சகோதரிகள் தங்களுடைய வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தலைவாழை இலையில் விருந்து கொடுத்து பரிசு பொருட்களை பரிமாறிக் கொள்ள வேண்டும்.

Categories

Tech |