தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஸ்டெர்லைட் விஷயத்தில் டிவியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என சொல்லி எடப்பாடி சும்மா சமாளிக்கின்றார். ஐஏஎஸ் அதிகாரி ஸ்மார்ட் சிட்டியில் 10 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாக சொல்லி, இந்த அரசாங்கமே ஒரு நபர் ஆணையம் அமைத்து.
அந்த அறிக்கையை மரியாதைக்குரிய நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் முதல்வரிடம் கொடுத்ததற்கு 1௦ நாளுக்கு முன்னாடியே கொடுத்ததாக நினைக்கிறேன்.அதைப் பற்றி சத்தமே இல்லையே என்னவென்று தெரியவில்லை ? மக்களுடைய வரி பணம் 10,000 கோடி லாசாகி இருக்கிறது, அதில் முறைகேடு நடந்திருக்கிறது என்று சொல்லி, ஐஏஎஸ் அதிகாரி மூத்த அதிகாரி நியமித்து அந்த அறிக்கையை கம்முனு வைத்திருக்கிறார்களே..
இதுபோல் அறிக்கை மட்டும் வெளியே வருகிறது, இதெல்லாமே அரசியல் தான். இது அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்வார்கள், யாரும் இதை பின்வாங்க மாட்டார்கள், எனக்கு தெரிந்து யாரும் இதில் தவறு செய்யவில்லை என்று எல்லாருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். அதனால் திரும்பவும் ஒரு ஊடகங்களுக்கு 24 மணி நேரமும் ஒரு செய்தி கிடைத்து விட்டதாக நான் நினைக்கிறேன். என்ன நடக்கிறது ? என்று நானும் உங்களை போல் பார்வையாளராக இருந்து பார்க்கிறேன் என தெரிவித்தார்.