10 ஆம் வகுப்பு , 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததாவது , 10 வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்27.ல் தொடங்கி ஏப்.13ல் நிறைவு பெறுகின்றது. மே.4ஆம் தேதி முடிவுகள் வெளியீடப்படும். அதே போல பிளஸ்1 பொதுத்தேர்வு மார்ச்.4.ல் தொடங்கி மார்ச்.26இல் நிறைவடைகின்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே.14ஆம் தேதி வெளியீடப்படும்.
மேலும் பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச்.2.ல் தொடங்கி மார்ச்.24ல் நிறைவு பெற்று தேர்வு முடிவுகள் ஏப்.24ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.45 லட்சம் மாணவர்களும், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.26 லட்சம் மாணவர்களும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8.16 லட்சம் மாணவர்களும் எழுதவுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.