லாரி சக்கரத்தில் சிக்கி பெண் இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் மகாலிங்கம் அம்மன் கோவில் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் துரைப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனா தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நேற்று காலை வழக்கம் போல வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர்கள் பொன்மார் பகுதியில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த டிரெய்லர் லாரி ஹாரன் அடித்தது.
இதனால் மணிவண்ணன் பிரேக் பிடித்த போது நிலைதடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்தனர். இதனால் லாரி சக்கரத்தில் சிக்கி கீர்த்தனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கீர்த்தனாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்