தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் கொந்தளித்தது. அந்த அளவுக்கு மிகப்பெரிய பொய்யின்னு சொல்லக்கூடாது, அது அவைக்கு இடம் தராதது. அதனால அதற்கு பதிலாக மாற்றி சொல்வதாக.. உண்மைக்கு மாறான தகவல தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் பேசியிருக்கிறார், சொன்னார் இந்த கருத்தை சொன்னாரு.
கிராமத்தில் ஒரு பழமொழியை சொல்லுவாங்க… கடப்பாரையை முழுங்கிட்டு கசாயம் குடிச்சேன்னு, அந்த அளவுக்கு ஒரு மிகப்பெரிய பொய்யை அவர் அன்றைய தினம் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது எவ்வளவு மிகப்பெரிய தவறு என்பதை அவருடைய ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஆணையமே சொல்லி இருக்கு.
இந்த ஆணையம் நம்ம அமைச்சதில்லை, அவங்க அமைச்ச ஆணையம் தான்.ஒருவேளை நம்ம அமைச்சி இருந்தா, இதுல அரசியல் என கூட சொல்லி இருக்கலாம். அதனால அவங்க அமைச்சர் ஆணையமே சொல்லிருக்கு.நேற்றை அறிக்கையில் வச்ச இருந்த ரெண்டு ஆணையமுமே அவங்க அமைச்ச ஆணையம் தான். நாம எந்த ஆணையமும் அமைக்கல என தெரிவித்தார்.