சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இடம் பொருள் ஏவல். இந்த படம் சென்ற 2015 ஆம் வருடமே தயாரிக்கப்பட்ட நிலையில் கடன் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லை. இந்த நிலையில் இந்த படம் தற்போது விரைவில் வெளியாகும் என இயக்குனர் கூறியுள்ளார். இது குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, இயக்குனர் லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி அவர்களின் இயக்கத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ்.ராமகிருஷ்ணன் கதையில் இடம் பொருள் ஏவல் திரைப்படத்தை தயாரித்திருக்கின்றோம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால்,, ஐஸ்வர்யா ராஜேஷ் நந்திதா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். வைரமுத்துவின் பாடல்களுக்கு முதன் முதலில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் திரைப்படத்தை விரைவில் வெளியிட இருக்கின்றோம் என கூறப்பட்டுள்ளது.