Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி….. “பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி”….!!!!!

ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இயற்பியலை பெரிதான முறையில் ஆர்வமுடன் கற்கும் செய்முறை மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் ஆறுமுகநேரி காயல்பட்டினத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 137 பேர் பங்கேற்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் இருக்கும் அனைத்து ஆய்வுகளையும் சிறந்த முறையில் தெளிவாக செய்யும் வகையில் இளங்கலை மூன்றாம் வருட மாணவிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.

Categories

Tech |