ஈரோட்டில் போதை மாத்திரை, ஊசி விற்பனை செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் பகுதியில் போதைபொருள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சம்ப இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் சந்தேகப்படும்படி அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் சாஸ்திரிநகர் வாய்க்கால்மேடு பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் அய்யனார் என்பது தெரிய வந்தது.
இவர்களிடம் போலீசார் சோதனை செய்ததில் ஒரு பாக்கெட் கஞ்சா, 30 போதை மாத்திரைகள், ஒரு ஊசி உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணை செய்ததில் இதை விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இதை அடுத்து இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தார்கள். மேலும் இவர்களுக்கு போதை மாத்திரைகள் கஞ்சாவை விற்பனை செய்த அன்பு என்பவரை வலை வீசி தேடி வருகின்றார்கள்.