இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கின்றார். இதனை அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகின்றார். கர்ணன் படத்துக்குப்பின் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ்.
அப்போது திடீரென்று உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க திட்டமிடப்பட்டதால் துருவ் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் அடுத்தப்படியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.