நடிகர் சூர்யாவிற்கு சூரரைப் போற்று திரைப்படத்திற்கு தேசிய விருது.
இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியான படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாததால் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 68வது தேசிய விருது பட்டியலில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசை அமைப்பாளர் உள்ளிட்ட 5 விருதுகளையும் வென்றது. இதனை தொடர்ந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்ற இந்த படத்திற்கு எட்டு பிலிம்பேர் விருதுகள் கிடைத்திருக்கிறது.
இந்த விழாவில் சூர்யா பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி ரைவலானது. அதில் அவர் கூறியதாவது, “ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படம் தியேட்டரில் வரவில்லை என்று வருத்தப்பட்டபோது ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு காரணமாக வெற்றி பெற்றது. நேஷனல் அவார்டு வரைக்கும் இந்த படத்தை போக வைத்தது ரசிகர்கள் தான். நீங்கள் தான் சூரரைப்போற்று படத்தை எல்லா இடத்திற்கும் கொண்டு போய் சேர்த்தீர்கள். நீங்கள் தான் இந்த வெற்றியை எங்களுக்கு கொடுத்திருக்கிறீர்கள். நாம ஜெயிச்சிட்டோம் அன்பான பேன்ஸ் நாம ஜெயிச்சுட்டோம் என ரசிகர்களை பார்த்து” என்று சூர்யா பேசியுள்ளார்.