கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றது.
இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் அணியும் கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதற்கு நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏபிகே பழனிசெல்வம் தலைமை தாங்க பள்ளி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் கண்ணப்பன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.