நடிகர் அர்னவ் ஜாமின் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கேளடி கண்மணி, கல்யாண பரிசு, மகராசி உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழில் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் கேளடி கண்மணி தொடரில் நடித்தபொழுது தன்னுடன் நடித்த நடிகர் அர்னவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்ற சில நாட்களாகவே கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் கூறி வருகின்றார்கள். தனது கணவர் கர்ப்பிணியான என்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகவும் திவ்யா புகார் கொடுத்தார்.
இதனால் அர்னவ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததால் அனைத்து மகளிர் போலீஸ்சார் அர்னவ்வுக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் 18-ம் தேதி ஆஜராவாதாவும் வக்கீல் தரப்பில் கூறப்பட்டது. இதனால் போரூர் உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அர்னவ்வை கைது செய்தார்கள். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அர்னவ்-க்கு வருகின்ற 28ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில் நடிகர் அர்னவ் ஜாமீன் கோரி பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதற்கு திவ்யா தரப்பில் அர்னவ் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறப்பட்டது. இருவர் தரப்பிலும் விசாரித்த நீதிபதி அர்னவ் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் நடிகர் அர்னவ் மீண்டும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இருக்கின்றார் குறிப்பிடத்தக்கது.