Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

Happy News: நாளை முதல் திரையரங்குகளில்…. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி….

தீபாவளி பண்டிகையையொட்டி அக். 21ஆம் தேதி முதல் அக்.27ஆம் தேதி வரை 7 நாட்கள் திரையரங்குகளில் சிறப்புக் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இதில் சர்தார் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியது.

இதன் காரணமாக தான், சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதிய நிலையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |