இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களில் Oppo நிறுவனத்தினுடைய மொபைல்களும் ஒன்று. அதே நேரம் அந்நிறுவனத்தின் விலை சற்று அதிகமாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் அவ்வப்போது கருத்து எழுவதுண்டு. இப்போது ஓப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தேர்வுசெய்யப்பட்ட தன் ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் ஓப்போ F21 ப்ரோ, ஓப்போ ஏ55 மற்றும் ஓப்போ ஏ77 ஆகிய மாடல்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. ஓப்போ இந்தியா அதிகாரப்பூர்வமான வலைதளத்தில் குறைக்கப்பட்ட புதிய விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
அந்த அடிப்படையில் ஓப்போ F21ப்ரோ மற்றும் ஓப்போ ஏ55 ஸ்மார்ட் போன்களின் விலையானது ரூபாய்.1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் Oppo ஏ 77 ஸ்மார்ட் போன் ரூபாய்.15,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. Oppo F 21 ப்ரோ 8gp ரேம், 128gp மெமரி மாடல் இப்போது ரூபாய்.21,999க்கு கிடைக்கிறது. Oppo ஏ55 ஸ்மார்ட் போன் ரூபாய்.14, 999க்கு கிடைக்கிறது. இதேபோல் ஒப்போ ஏ77 ஸ்மார்ட் போனின் 4gp ரேம், 128gp மெமரி மாடல் ரூபாய்.15 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கப் பெறுகிறது. அத்துடன் ஏ77S ரூ.17,999க்கு கிடைக்கிறது.
Stunning to look at and perfect to hold on to. The #OPPOA77s with Fiberglass-Leather design is available now only for ₹17,999.
— OPPO India (@OPPOIndia) October 14, 2022
அதன்பின் அம்சங்களை பொறுத்தவரையிலும் ஓப்போ ஏ55 மாடலில் 6.55 இன்ச் டிஸ்ப்ளே, 60Hz ரிப்ரெஷ்ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 50 MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. ஓப்போ F21 ப்ரோ மாடலில் 6.43இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப் டிராகன் 680 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 2MP 2வது சென்சார், 2MP மோனோக்ரோம் லென்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் 4500 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட்பாஸ்ட் சார்ஜிங் வசதியானது வழங்கப்பட்டு உள்ளது.