Categories
தேசிய செய்திகள்

“மகனை எரித்துக் கொன்ற தந்தை”… பின்னணி என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரளாவில் மகனை தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியைச் சேர்ந்த சுலைமான்- செரீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் குன்றிய மகன் சதக் என்பவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை செரினா வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டின் வராண்டாவில் சதக் இருந்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான் திடீரென அவரது மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் அலறி துடித்த சதக்கின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓடி வந்து சதக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து தப்பி ஓடிய சுலைமானை திருச்சூர் போலீஸர் கைது செய்திருக்கின்றனர். அதன்பின் போலீசார் நடத்திய விசாரணையில் தினம் தினம் மகன் படும் வேதனையை தாங்கிக்கொள்ள முடியாததால் உயிரோடு எரித்து கொன்று விட்டதாக சுலைமான் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |