Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராடக்கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில்  18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதே மாவட்டத்தை (சேலம்) சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அதில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என்று மனு தாரருக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் இது தொடர்பாக மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை மார்ச் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Categories

Tech |