செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்…
இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை நான் அறிக்கையின் வாயிலாக ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கையின் வாயிலாக தெளிவுபடுத்தி விட்டோம். இன்னைக்கு வேற எதுவுமே இவுங்களுக்கு கிடைக்கல. மக்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பு, மக்களிடம் யாரும் செல்ல முடியவில்லை, கொந்தளிப்பு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை, திருட்டு, கட்டுப்படுத்த முடியாமல் முதலமைச்சரின் திணறிக் கொண்டிருக்கிறார்.
நாங்க சொல்லல… அவருடைய பொதுக்குழுவில் இன்றைய முதலமைச்சர் திராவிட முன்னேற்றக் கழக தலைவரே குறிப்பிடுகிறார். அவர் கருத்து சொல்லும் பொழுது.. நான் காலையிலே கண் விழிக்கின்ற பொழுது, எங்கள் கட்சியிலிருந்து என்ன பிரச்சனை வருமோ என்று அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்றார். அப்படி என்றால் அவர்களின் கட்சி எவ்வளவு அராஜகம் செய்கிறது ? அவர் கொடுத்த வாக்குமூலம், நாம் கொடுக்கவில்லை என தெரிவித்தார்.