திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகை தினத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுபடி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு பட்டாசுகளை விற்கவோ, வெடிக்கவோ கூடாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது விபத்து ஏற்பட்டால் இலவச தொலைபேசி எண் 100- ல் போலீசாரையும், 112- ல் தீயணைப்பு துறையினரையும், அவசர மருத்துவ உதவிக்கு 108 ஆம்புலன்சையும் உடனடியாக அழைக்க வேண்டும். இதனை அடுத்து தீபாவளி கொண்டாட்டத்தின் போதுமது குடித்துவிட்டு போதையில் வாகனம் கூட்டினால் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பர். எனவே பொதுமக்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக தீபாவளியினை கொண்டாட வேண்டும் என கூறியுள்ளார்.