Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவன்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை….. HIV தொற்று அபாயம்….. விருதுநகர் அருகே பரபரப்பு….!!

விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில்  கண்டறியப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு  அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எனக்கும் எனது மனைவிக்கும் HIV இருப்பதாகவும்,  நாங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த திடுக்கிடும் தகவலை அடுத்து கிராமத்திற்கு விரைந்த அதிகாரிகள் இவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சோதனை செய்தனர். நல்லவேளையாக அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் எப்படி எச்ஐவி தொற்று ஏற்பட்டது இவர் இதற்கு முன்பாக வேறு யாருடனாவது பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தாரா?  என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |