விப்ரோ நேர்மை மீறல் அல்லது துன்புறுத்தலுக்கு எதிரானது எனவும் இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை மீறினால் ஊழியர் தன் வேலையை இழக்க நேரிடும் எனவும் விப்ரோ சேர்மன் ரிஷாத் பிரேம்ஜி தெரிவித்து இருக்கிறார். அதன்படி நேர்மை தவறிய ஒரு மூத்த ஊழியரை வெறும் 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்தோம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியாகிய சில வாரங்களுக்கு பின், அதன் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி ஒரு பொது மேடையில் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார்.
நேற்று பெங்களூரில் நடைபெற்ற நாஸ்காம் தயாரிப்பு மாநாட்டில் ரிஷாத் பிரேம்ஜி பேசியதாவது “என் நிறுவனத்தில் முதல் 20 தலைவர்களில் ஒருவரை பெரிய ஒருமைப்பாடு மீறல் செய்ததாக கண்டறியப்பட்ட வெறும் 10 நிமிடங்களில் டிஸ்மிஸ் செய்யும் முடிவை எடுத்தோம். அந்நபர் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆவார். எனினும் அவர் நேர்மை தவறியது நிரூபணம் ஆனதால் அந்த கடினமான முடிவை மேற்கொள்ள வேண்டியிருந்தது” என்று அவர் கூறினார்.