சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்தம்பாளையம் பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து சென்ற 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இதனை அடுத்து தண்டபாணி மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது வயதில் சந்தேகமடைந்த டாக்டர்கள் உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 16 வயது தான் என்பது உறுதியானது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் தண்டபாணியை போலீசார் கைது செய்தனர்.