Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஏரியில் மூழ்கி….. இளம்பெண் மரணம்…… விழுப்புரம் அருகே சோகம்….!!

விழுப்புரம் அருகே இளம்பெண் ஒருவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த பணப்பாக்கம் இருளர் காலனியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் இருவரும் நேற்றையதினம் அருகாவூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றிருந்தனர்.

மீன்களை தேவையான அளவுக்கு பிடித்து விட்டு பின் வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த கணவன் உறவினர்களுடன் மல்லிகாவை தேட ஆரம்பித்துள்ளார். ஊர் முழுக்க தேடியும் கிடைக்காததால் மீண்டும் ஏரிக்குச் சென்று கண்ணன் பார்க்க, அங்கு மல்லிகா சடலமாக இறந்து கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |