சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு அண்ணன் நினைச்சா, மழையை கூட நிப்பாட்டிராரு. ஏனென்றால், அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்ல. எனக்கு நம்பிக்கை இல்லை, சொல்றேன். இருந்தாலும் எனக்கு இன்னைக்கு மதியம் தொலைபேசியில் அழைத்து ஞாபகப்படுத்தினார்.
நான் கேட்பதும் முன்னாடி அவரே சொல்லிட்டாரு, ரெண்டு இடத்துல ஏற்பாடு பண்ணி இருக்கு. மழை பெஞ்சா இன்னொரு இடம், மழை பெய்யவில்லை என்றால் இன்னொரு இடம் அப்படின்னு சொன்னாரு. இங்க வந்த உடனே கேட்டேன்… என்னஅண்ணண் ? உங்க நேரம், மழை எல்லாம் நிப்பாட்டிடீங்கன்னு.. அதுக்கு அவரு ஒரு காரணம் சொன்னாரு. அரங்கத்தில் நடத்தினால், அங்க வெறும் 1000 பேர் தான் உட்கார முடியும்.
இங்க இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம். கிட்டத்தட்ட ஒரு 5000 பேரை உட்கார வைத்திருக்கிறேன் நானு.. அப்படின்னு பெருமையா, சொன்னாரு. தலைவர் எப்பயும் பெருமையா சொல்லுவாரு… சேகர்பாபு அல்ல செயல்பாபு என்று… நானும் நிறையா வாட்டி சொல்லி இருக்கேன். என்னை கடைசியா பேசுங்கன்னு சொன்னாரு. இல்ல நான் தான் துவக்கி வைக்கிறேன். எனவே நான் தான் முதல்ல பேசணும் என சொன்னேன்.
அப்புறம் சொன்னாரு… இல்ல நீங்க பேசிட்டு போயிட்டீங்க அப்படின்னா கூட்டம் கலைந்திட போகுதுன்னு சொன்னாரு. உங்களைப்போல நானும் வந்திருக்கக்கூடிய அத்தனை பேச்சாளர்களுடைய பேச்சை கேட்பதற்காக நானும் அவர்களோடு ஆவலோடு காத்திருக்கிறேன். நீங்கள் அத்தனை பேரும் நிகழ்ச்சி முடியும் வரை அண்ணன் தயாநிதி மாறன் உட்பட …
ஏனென்றால் அவர் வரும்போது என்னை சொல்லி கூப்பிட்டு வந்தாரு. பேசி முடிச்சுட்டு நீ கெளம்பிரு, உன் பின்னாடியே வந்துருதேன் என சொன்னாரு. எனவே அத்தனை பேரோட பேச்சையும் கேட்கணும். எப்படியும் சேகர்பாபு அண்ணன் விடமாட்டார் என கலகலப்பாக பேசினார்.